KKSM. Dhehln Baqavi

இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!
*******************************************
மிகச்சிறந்த கல்வியாளரும், இளையாங்குடி ஜாகிர் உசேன் கலைக்கல்லூரியின் முதல்வராகவும் சென்னை புதுக் கல்லூரியின் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் சமுதாயத்தின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பின் முன்னேற்றத்திற்காகவும் சமுதாய ஒற்றுமைக்காகவும் பாடுபட்டுவந்தவரும்,
பல்வேறு சமுதாய அமைப்புகளில் பொறுப்பு வகித்தவருமான மரியாதைக்குரிய கேப்டன் அமீர்அலி அவர்கள் இறைவனிடம் மீண்ட செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.
அவரது சிறப்பான தன்னலமற்ற பணிகளைப்பாராட்டி எஸ்டிபிஐ கட்சி 2017 ஆம் ஆண்டு காயிதேமில்லத் விருது வழங்கி அவரைகவுரவித்ததை
இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
எஸ்டிபிஐ கட்சியின்பணிகளின் மீதுமிகவும் அன்பு கொண்டவர். பல்வேறு ஆலோசனைகளை வழங்கியவர். அவரது மறைவு சமுதாயத்திற்கு பெரும் இழப்பாகும்.
அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது மறுமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Comments